ஆபத்தான நிலையில் இந்திய ஜனநாயம் -உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

0

அரசியலமைப்பு சார்ந்த இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், அமுல்யா என்ற பெண் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேச துரோகச் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமுல்யா கைது குறித்து, நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி தெரிவித்ததாவது, “தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தேசத்துரோக சட்டம் மட்டுமில்லாது மற்ற சட்டத்தின் கீழ்களிலும் அமுல்யாவை கைது செய்ய முடியாது. நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் தலையிட்டு விசாரிக்க வேண்டும்” என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, அமுல்யாவுக்கு நக்சல் தொடர்புள்ளதாக கூறியதை, “எவ்வித அடிப்படையும் இல்லாத கருத்து”என்று கண்டனம் சுதர்சன் தெரிவித்துள்ளார். அமுல்யா கைது செய்யப்பட்ட பிறகு வழக்குகளை நியாயப்படுத்த பல வகைகளில் முயற்சிச்சித்து வருகின்றனர். தற்போது அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Comments are closed.