பாஜகவுக்கு அழிவு ஆரம்பமாகிவிட்டது- தேசியவாத காங்கிரஸ்

0

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை 3 நாட்களில் முடிவுக்குக்கொண்டு வந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை, மகாராஷ்டிராவின் சாணக்கியர் என, அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்து நவாப் மாலிக், “உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்று கொள்ளும்படி, சரத் பவார் கேட்டு கொண்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்க தாக்கரே ஒப்புக் கொண்டுள்ளார்.

சூழ்ச்சி செய்து அரசியல் சாணக்கியர் என பெயரெடுத்த பாஜக தலைவர் அமித்ஷா தோற்கடித்த, மகாராஷ்ராவின் அரசியல் சாணக்கியராக சரத் பவார் திகழ்கிறார். அதிகாரம், ஆவணத்துடன் செயல்பட்டு வரும் பாஜகவின் அழிவு மகாராஷ்டிராவில் ஆரம்பமாகிவிட்டது என நவாப் மாலிக் கூறியுள்ளார்.

Comments are closed.