இந்தியாவை இந்து நாடாக மாற்ற முடியாது – முன்னாள் பிரதமர் தேவகௌடா

0

பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிராக கர்நாடக மாநிலம் ஹாசனில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா கலந்துக்கொண்டு பேசியதாவது:

இந்தியாவை இந்து நாடாக மாற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கனவு கண்டுகொண்டிருக்கிறார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற, பன்மொழிகள் கொண்ட நாடு. இந்தியாவை இந்து நாடாக்குவது அவ்வளவு எளிதானதல்ல.  இந்து நாடாக்க அமித்ஷாவால் முடியாது. கட்சி, மத மாச்சரியங்களை மறந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாட்டில் அமைதி நிலவுதற்காகவும், நலன் பாதுகாக்கப்படுவதற்காகவும் எதிர்க்க வேண்டும்.

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்க்க அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

பாஜக தலைவர்களின் தேசவிரோத கருத்துகளால் சமுதாயத்தில் அமைதி சீர்குலைக்கப்படுகிறது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு, பாஜகவின் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு தேவகௌடா தெரிவித்தார்

Comments are closed.