காவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி

0

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த19ம் தேதி இரவு கைது செய்யப்பட்டதாக போலீசார் தங்களது எஃப்.ஐ.ஆரில் குறிப்பட்டிருந்தனர். கடையை இரவு 9 மணிக்கு மேல் திறந்து வைத்திருந்ததாகவும், இது ஊரடங்கு விதி மீறலாக இருந்ததால் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, காவல்நிலைத்தில் வைத்து தந்தை மற்றும் மகனை போலிஸார் அடித்து கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல பிரபலங்களும் சினிமா துறையிலும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ஹரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து திரைப்படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.