திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

0

வருகிற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சிதம்பரம் (தனி) தொகுதியில்-  தொல். திருமாவளவன் மற்றும் விழுப்புரம் (தனி) தொகுதியில்-  ரவிக்குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதியை ஒதுக்கியது. இதில், கோவை தொகுதியில்  பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும் மற்றும் நாகை தொகுதியில் செல்வராஜும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் IUML கட்சிக்கு ஒதுக்கிய ராமநாதபுரம் தொகுதியில் IUML கட்சி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுவார் என அக்கட்சி தலைவர் காதிர் முகைதீன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கிய ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பாக அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைக்கோ அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கிய நாமக்கல் தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Comments are closed.