காஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு!

0

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தடொனால்ட் டிரம்ப், அழகான ஜம்மு காஷ்மீர், நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய பிரச்சனைகள் உள்ளன. இந்துக்கள், இஸ்லாமியர்கள் இணைந்து வாழ விருப்பம் இல்லாத பகுதியாக ஜம்மு காஷ்மிர் உள்ளது. இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காண்பது இயலாத காரியம்.

தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கவும் அல்லது தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், இரு நாட்டு பிரதமர்களிடமும் தாம் தொலைபேசியில் பேசியதாகவும், இருவரும் தமக்கு நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமை பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் இடையே மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது அவரிடம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண முயற்சி செய்வேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட இடமில்லை என்று இந்தியா அறிவித்த நிலையில், தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ள வேண்டி அமெரிக்கா சமரசம் செய்ய விரும்புகிறதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Comments are closed.