“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்

0

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. “சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆரை அமல்படுத்தி நாட்டு மக்களை போராட்டக்களத்தில் தள்ளியுள்ளது. தனது பிற்போக்கு அடிப்படைவாத சித்தாந்தத்தை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க அரசு நடவடிக்கைகளுக்கு, இக்கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் என்.பி.ஆர்-ஐ அனுமதிக்கமாட்டோம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். மேலும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் போது, எவ்வித தகவல்களையும் அளிக்க வேண்டாமென பொதுமக்களை அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது” என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுளது.

Comments are closed.