டாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0

உத்தர பிரதேச பாஜக அரசால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கான்-ஐ உடனடியாக பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017இல் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகளின் உயிரிழக்கும் தருவாயில் இருந்தபோது தனது சொந்த செலவில் ஆக்சிஜன் வாங்கி காப்பாறினார் டாக்டர் கஃபீல் கான். பின்னர் அவரால்தான் பல குழந்தைகள உயிழக்கும் நிலை ஏற்பட்டதென கூறி பாஜக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயக ரீதியில் போராடிய அவரை, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் எனரு பொய் கூற்றம் சாட்டி கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் கூறியுள்ள உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டமொன்றில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசியதாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.”அவரின் பேச்சு வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் நோக்கில் இல்லை, தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையிலேயே இருந்தது,” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.