தீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

0

தீவிரவாதிகளுக்கு உதவியதால் என்.ஐ.ஏ வால் கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் சிங் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு கஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தின் சிறப்பு பிரிவில் காவல் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்.பி.) பணியாற்றியவர் தேவேந்தர் சிங். இவர் இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு உதவி செய்து வந்ததுள்ளார்.

சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை வைத்துக் கொண்டு நாட்டுக்கு எதிரான தகவல்களை பயங்கரவாதிகளுக்கு அவர் வழங்கி வந்துள்ளார். இதனால் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ. அவர் மீதான குற்றப்பத்திரிகையை திங்கள் கிழமை தாக்கல் செய்தது. அவருடன் மேலும் ஐந்து பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கைது செய்ததிலிருந்து 90 நாட்களுக்குள் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், கடந்த மாத இறுதியில், டெல்லி நீதிமன்றம் இவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தது.

தற்போது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவு வழக்குகளில் தேவேந்தர் சிங் மற்றும் ஐவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.