நாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்

0

இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுவதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அனைவரையும் அச்சமூட்டும் வகையில் உள்ளது. முறைசாரா துறையில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்டால், GDP 23.9 சதவிகித வீழ்ச்சியைக் காட்டிலும் மோசமானதாக இருக்கும்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான அமெரிக்காவிலும், இத்தாலியிலும் 9.5 சதவிகிதமும், 12.4 சதவிகிதமும்தான் வீழ்ச்சியடைந்துள்ளன.

தற்போதைய சூழலில் அரசினுடைய நிவாரணம் மிகவும் முக்கியமானது. எனினும் ம்த்திய அரசு இதுவரை அளித்த உதவிகள் என்பது மிகவும் சொற்பமானது. முதன்மையாக ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு கடன் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள வளங்களை கூடுதலாக செலவிட அரசு தற்போது தயக்கம் காட்டுகிறது. ஆனால், இந்த யுத்தி தன்னைத் தானே தோற்கடிப்பதாகும்.” இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.