மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்

0

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதால் 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும் என்று CBSE அறிவித்தது.

அதன் காரணமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் படிப்புகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11ம் வகுப்பில் உள்ள அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை போன்ற பாடப் பகுதிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு அரசியல் அறிவியலில் இருந்து உலகின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள், இந்திய பொருளாதார வளர்ச்சியின் தன்மை மாற்றம் போன்ற பாடப் பகுதிகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய வெளியுறவு கொள்கை பாடத்தில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் போன்ற பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன.

10ம் வகுப்பில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம், பாலினம் மற்றும் ஜனநாயகத்திற்கு சவால்கள் பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டன.

இதுபோன்று, பள்ளிக் கல்வியில் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து முக்கியமான பாடப்பகுதிகளை மத்திய பாஜக அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது.

தற்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பாஜக அரசின் வகுப்புவாத சட்டங்களை எதிர்த்து போராட்டங்களில் இறங்கிவருகின்றனர். இதன் காரணமாகவே சமூகம் பற்றி கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய பாடப்பகுதிகளை மட்டும் பாஜக அரசு நீக்கியுள்ளதாக பலதரப்பினரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Comments are closed.