நாட்டில் படித்த இளைஞர்களை தண்டிக்கும் மோடி அரசு -ராகுல் காந்தி

0

நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தராத அரசாக பாஜக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, படித்த இளைஞர்கள் கடுமையான வேலையின்மையை எதிர்கொண்டு வருவதாகவும், ஆனால், அரசோ அவர்களை பல்வேறு வகைகளில் தண்டித்து வருகிறது என்று கூறியுள்ளார். 

பாஜக அரசு தற்போது படித்து பட்டம் பெற்ற இளைஞர்களை, குறிப்பாக ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த இளைஞர்களைத் தண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு ராகுல் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.