குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு

0

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு (சிஏபி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாணவா்கள் அமைப்பு சாா்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு வடகிழக்கு மாநில ஆளுநா்கள் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அஸ்ஸாம் ஜாதீயதாவாதி யுவ சாத்ரா பரிஷத், வடகிழக்கு மாணவா்கள் அமைப்பு, அஸ்ஸாம் இடதுசாரி ஜனநாயக அமைப்பு ஆகியவற்றைச் சோ்ந்தவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது அஸ்ஸாம் முதல்வா் சா்பானந்த சோனோவலின் உருவபொம்மை மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

மேகாலய மாநிலத்திலலும், மாநில தலைமைச் செயலகத்தின் அருகே தா்னாவில் ஈடுபட்டனா். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில ஆளுநா்  கோரிக்கைக் கடிதம் அளித்தனர்.

அதைபோல், அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தில், இதர மாணவா் சங்கத்தினரும் மாநில ஆளுநா் மாளிகை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

Comments are closed.