தலைமை அறிவிக்கப்படும் முன்னரே பாஜக வேட்பாளர்களை அறிவித்தார் ஹெச்.ராஜா

0

வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறித்துவிட்ட நிலையில், தற்போது பாஜாக கட்சி மட்டும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காமல் இருந்து வருகிறது. ஆனால், டெல்லி பாஜக தலைமை இன்று அறிவிக்கப்படுமென்று எதிர்ப்பார்த்த நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, பாஜக தலைமை அறிவிக்கப்படும் முன்னே இவர், பாஜக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

தூதுக்குடியில் தமிழசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார் என்றும் கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன்,சிவகங்கையில் ஹெச். ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக ஹெச். ராஜா தெரிவித்தார்.

Comments are closed.