புதிய விடியல் – 2019 செப்டம்பர் 16-130

0

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் சேருவதற்கு தயார்’ என்று அறிவித்திருக்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ். டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவு அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில்தான் இவ்வாறு அறிவிப்பு செய்திருக்கிறார். வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் தமிழகம் இந்த திட்டத்தில் இணையும் என்ற உறுதியையும் கொடுத்திருக்கிறார். ‘இந்த திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை’ என கூட்டுவுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களின்  

மேலும் படிக்க

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை அழிக்கவரும் ரிலையன்ஸ்

சவூதி அரேம்கோ எனும் எண்ணெய் நிறுவனம் சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ மற்றும் உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய எரிவாயு உற்பத்தி நிறுவனமாகும். ஒரு நாளைக்கு 1 கோடி பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவிற்கு மிகப்பெரிய நிறுவனம் இது.

அப்படி ஓங்கி வளர்ந்துள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் ரசாயன வணிகத்தின் 20 % பங்குகளை 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், அதாவது

மேலும் படிக்க

தனியார்மய அச்சுறுத்தலில் ஆயுத தொழிற்சாலைகள்!

இந்திய அரசின் தொடர் கண்காணிப்பில் இருந்து கொண்டிருக்கும் தூதரகங்களில் வேலை செய்யும் அதிகாரிகளே அந்நிய நாட்டிற்கு இராணுவ ரகசியங்களை விற்றுவிடும் நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்த்தால் நமது நாட்டின் பாதுகாப்பு என்னவாகும்? இதற்கான முதல்கட்ட வேலைகளில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன்

மேலும் படிக்க

இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு நீதி நிலைபெறுமா?

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறித்து பெரும்பான்மையினர் மௌனம் காப்பதால் வழக்கு விசாரணையின் முழு விபரங்களையும் வாசகர்களுக்கு வழங்குகிறோம். முதல் பகுதி இந்த இதழில் வெளியிடப்படுகிறது. -ஆசிரியர்

முன்னுரை

நில உரிமை வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த 466 ஆண்டு கால பழமை வாய்ந்த, வரலாற்றுத்தொன்மை மிக்க முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது. பட்டப்பகலிலே ஒட்டு மொத்த உலகும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வலதுசாரி மதவாத இந்துக்களான சங்பரிவார கும்பலால்  சட்டத்திற்கு புறம்பாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

மேலும் படிக்க

விமர்சனம் தேச துரோகமல்ல!

இந்திய குடிமகன் என்ற நிலையில் நாட்டு மக்களுக்கு அரசை விமர்சிப்பதற்கான அதிகாரம் உள்ளது. அரசு, நீதித்துறை, இராணுவத்தை விமர்சிப்பதை தேச துரோகமாகக் கருதக்கூடாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை, அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால் நமது நாடு சர்வாதிகார நாடாகிவிடும். ஜனநாயக நாடாக இருக்க முடியாது. விருப்பு, வெறுப்பு, அச்சமின்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த உலகம் மக்கள் வாழ்வதற்கு இன்னும் உகந்ததாக இருக்கும். அகமதாபாத்தில் வழக்கறிஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முகாமில் பேசும்போது உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆட்சியில் இருப்பது எந்த அரசாக இருந்தாலும் அதனை விமர்சனம் செய்வதற்கான அனைத்து உரிமைகளும் குடிமக்களுக்கு உண்டு. பெரும்பான்மையின் கருத்தை எப்போதும் சட்டமாக்கிவிட முடியாது.  

மேலும் படிக்க

என்புரட்சி

  1. திசை திரும்பிய விவாதம்

நாளைக்கு தேர்தல். நாட்டின் 35வது அதிபர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள அமெரிக்க மக்கள் ஆர்வமாக வாக்களிக்க தயாராகி விட்டனர். தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்த ஐசனோவரின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் நிக்ஸன் வெற்றி வேட்பாளராக வலம் வந்தார். அவர் தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருக்கிறார்.

அவரை எதிர்த்து, மசாசூசெட்ஸ் மாகாண மேலவை உறுப்பினரான ஜான் கென்னடி ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு முறையும்,

மேலும் படிக்க

22. Fruits Of Islam (FOI) தொண்டர் படை

நான் சந்தித்து வந்த இடர்களை முடிவுக்கு கொண்டு வர ஒரு வழியே இல்லையா என்பதைச் சுற்றியே என் சிந்தனை ஓடியது.

அமெரிக்க கறுப்பர்களின் பிரச்சினைக்கு தீர்வு தனி நாடும், இஸ்லாமும்தான் என்று நேஷன் ஆஃப் இஸ்லாம் பிரச்சாரம் செய்கிறது. இது தீர்வல்ல என்று கருதும், குடியுரிமைகளுக்காகப் போராடும் கறுப்பின தேசியவாதக் குழுக்கள் எங்கள் பிரச்சார வீச்சுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்ந்தேன். இப்படி கறுப்பர்களின் முன்னேற்றத்துக்காக, நலனுக்காக செயல்படும் சமூக இயக்கங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு சாத்தியமே இல்லையா என்று சிந்திக்கும் போது, வழக்கம் போல வரலாற்றின் பக்கம் என் கவனத்தை திருப்பினேன். மேலும் படிக்க

குற்றம் குற்றமே!

தொலைக்காட்சியில் காலைச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் வழக்கமான பரபரப்பு இன்றி வீடு அமைதியாக இருந்தது. ஸாலிஹாவும் அப்துல் கரீமும் ஆளுக்கொரு கப் ஹார்லிக்ஸ் எடுத்துக்கொண்டு தந்தையின் அருகில் வந்து அமர்ந்தனர்.

செய்தியில் சிறுவன் ஒருவனைப் பாராட்டி, மெடல் வழங்கி, போலீஸ் அதிகாரி பேசிக்கொண்டிருந்தார். “அவனுக்கு போலீஸ் எதற்கு மெடல் கொடுக்கிறார்கள் டாடி?” என்று விசாரித்தாள் ஸாலிஹா.

தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்தார் முஸ்தபா. “அந்தப் பையனின் குடும்பம் மிகவும் ஏழையானதாம். வறுமை 

மேலும் படிக்க

Comments are closed.