புதிய விடியல் – 2019 நவம்பர் 16-30

0

கஸ்டடி மரணத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை!

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் கடந்த 15.10.2014 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர் செய்யது முகம்மது, காவல்துறை சார்பு ஆய்வாளர் (ஷிமி) காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இப்படுகொலையில் ஈடுபட்ட காளிதாஸை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும், வழக்கை கொலை வழக்காக மாற்றி கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலனாய்வு பிரிவிற்கு மாற்ற

வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அப்போது தமிழக அரசுக்கு முன் வைத்தது…

மேலும் படிக்க

பெகாசுஸ் வைரஸ் உளவு பார்ப்பது யாரோ?

இந்திய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என சுமார் 121 இந்தியர்கள் பெகாசுஸ்  (றிமீரீணீsus) என்ற வைரஸ் தாக்குதல் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக உளவு என்ற சொல் பிற நாட்டு அரசுகளுடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை நம் நாட்டு அரசே உளவு பார்க்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  காரணம்,  றிமீரீணீsus வைரஸை தயாரித்து விற்பனை செய்யும் ழிஷிளி என்ற இஸ்ரேலிய நிறுவனம், அரசாங்கங்களுக்கு மட்டுமே தங்களது (உளவு) சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ளது..

மேலும் படிக்க

பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு

சென்ற இதழ் தொடர்ச்சி…

இறுதி வாதம் தொடங்கியது

செப்டம்பர் 30 -முப்பத்து நான்காம் நாள்

வார விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் இன்று கூடியது. இத்தனை நாட்களும் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பினர்களின் வாதங்களுக்கும் பதிலளிக்கும் இறுதி வாதம் செய்ய இரு தரப்பினருக்கும் நாட்கள் ஒதுக்கப்பட்டன. வாதப் பிரதிவாதங்களைப் பொறுத்து சில வேளைகளில் ஒரே நாளிலும் அது நடைபெற்றது; அடுத்தடுத்த நாட்களிலும் நடைபெற்றது.

அதனடிப்படையில் இன்று ராம்..

மேலும் படிக்க

தலைகுனிந்த நீதி

பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்த முஸ்லிம்களை நிராசைப்படுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 1992 டிசம்பர் 6ல் சங்பரிவாரின் தசை பலத்தால் மஸ்ஜிதின் கட்டிடத்தை முஸ்லிம்கள் இழந்தனர். 2019 நவம்பர் 9ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் வக்ஃப் நிலத்தையும் இழந்துள்ளனர். பாபரி மஸ்ஜித் இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நிலத்தின் உரிமை மத்திய அரசு நியமிக்கும் அறக்கட்டளைக்கு சொந்தமாகும். முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலை கட்ட அயோத்தியில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பள்ளிவாசல் என்பது புனிதமானது, இறைவனின் இல்லம் என்பதே அவர்களது..

மேலும் படிக்க

துனீசியாவின் புதிய நம்பிக்கை

முல்லைப்பூ புரட்சியின் பிறப்பிடமான துனீசியா, அதிபர் பதவிக்கு மாறுபட்ட ஆளுமையை தேர்ந்தெடுத்ததன் மூலம் மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில், எளிமையான மனிதரான 61 வயதான கைஸ் ஸஈத் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். 77 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபருமானார். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட பெரும்பான்மையான வாக்காளர்கள் அவரை ஆதரித்துள்ளனர். தற்போதைய ஆட்சி முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துனீசிய மக்கள் புதிய மாற்றத்தை விரும்பினர்.

கட்சி அரசியல் விளையாட்டில் தேர்ச்சி பெற்றிராத கைஸ் ஸஈத் கலப்பற்ற இலக்கிய நயத்துடன் கூடிய அரபு மொழி பேசுபவர். அதிகாரத்தை விடாப்பிடியாக பற்றிப்பிடித்துக்கொண்டிருந்த பாரம்பரிய சக்திகளை கைஸ் ஸஈத் மூலம் துனீசிய மக்கள் தோற்கடித்துள்ளனர். தற்போதைய பிரதமர்…

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்

இந்திய விடுதலை வரலாற்றின் அத்தியாயங்களில் மறக்க முடியாதவைகளில் ஜாலியன்வாலா படுகொலைகளும் ஒன்று. அந்த துயர நிகழ்வின் நூறாவது ஆண்டில் நாம் உள்ள நிலையில் அது குறித்த விரிவான தகவல்களை இந்த தொடர் வழங்குகிறது. – ஆசிரியர்

  1. மக்களை வதைத்த சட்டங்கள்

இந்தியத் திருநாட்டை அடிமை செய்து..

மேலும் படிக்க

  1. கறுப்பு முஸ்லிம்களின் அமைப்பை முடக்க சதி

1961, பிப்ரவரி 13-ம் தேதி பாட்ரிஸ் லுமூம்பா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“கைது செய்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாட்ரிஸ் லுமூம்பா, ஜோசப் ஒகிடோ, மாரிஸ் போலோ – மூவரும் பாதுகாவலர்களை கொன்று விட்டு தப்பித்து விட்டனர். கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த அவர்களை அடையாளம் கண்டு கொள்ளாத கிராம மக்கள், மூன்று பேரையும் 

மேலும் படிக்க

அன்பு வெல்லும்

அலுவல் முடிந்து வரும்போது அதைக் கவனித்தார் முஸ்தபா. வீட்டு வாசல் கேட் அருகே சிறு பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்துவிட்டு நின்றிருந்தான் அப்துல் கரீம். பூனை ஒன்று அதை உறிஞ்சி ருசி பார்த்துக் கொண்டிருந்தது. புன்னகையுடன் நெருங்கிய முஸ்தபாவைப் பார்த்து மருட்சியுற்று, குடிப்பதை நிறுத்திவிட்டு நகர்ந்தது பூனை.

“பயப்படாதே! இவங்க என் டாடி. ஒன்னும் செய்யமாட்டாங்க” என்று பெரிய மனுஷன்போல் அதனிடம் பேசினான் கரீம்.

“இது யாருடைய பூனை கரீம்?” என்று விசாரித்தார் முஸ்தபா.

மேலும் படிக்க

எதிரிகள் நண்பர்கள் அல்லர்

“நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். -எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.” (அல்குர்ஆன் 60:9)

மேலும் படிக்க

Comments are closed.