புதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15

0

தண்டனை வழங்கும் உரிமை யாருக்கு?

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே குற்றம் சாட்டப்பட்ட நவீன்,
சிவா, கேசவலு, ஆரிஃப் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவத்தை நடித்துக் காட்டுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து வந்தபோது அவர்கள் தப்பிக்க முயற்சித்ததாகவும் அதனால் சுட்டதாகவும் போலீஸ் கூறுகிறது. எனினும், இது போலி என்கவுண்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தப்பிக்க முயற்சித்தபோது சுட்டதாக போலீஸ் கூறுவதை ஒப்புக்கொண்டாலும் இடுப்புக்கு கீழேதான் சுட வேண்டும் என்பது சட்டம்..

மேலும் படிக்க

மேட்டுப்பாளையம் 17 உயிர்கள் சொல்லும் பாடம்!

உயிர்களின் உன்னதங்களை உரக்கச் சொல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம்; கனத்த மனபாரங்களை ஏற்படுத்தக்கூடிய உயிரிழப்புகளைக்கூட கணப்பொழுதில் மறக்கக்கடிச் செய்யும் மரபுகள் உருவாக்கப்படுகிறது.
அந்த வகையில் ஆணவ, ஆதிக்கத்தின் அடையாளமாக எழுப்பபட்ட ஒரு சுவர், உறக்கத்தில் இருந்த 17 உயிர்களை சொற்ப நேரத்தில் காவு வாங்கியிருக்கிறது. இதுபோன்ற கோர இழப்புகளுக்கு காரணமானவர்கள் காக்கப்படுவதும், பாதிக்கப்பட்டோருக்கு உதவுபவர்கள் தண்டிக்கப்படுவதும் தினம்தினம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
‘தீண்டாமை ஒரு பாவச் செயல்’ என்பதி பன்னெடுங்காலமாக போதனைகள் நடைபெற்று வந்த போதிலும் தன்னைவிட தாழ்ந்தவன் தன் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு சுவர்…

மேலும் படிக்க

அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பொருளும், விளைவும்!

டிசம்பர் 18 ஐக்கிய நாடுகள் அவை சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக அறிவித்த நாள். உலகெங்கிலும் உள்ள மத, மொழி மற்றும் இன சிறுபான்மையினரை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வது குறித்தும் உலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்த நாளை கடைப்பிடிப்பதன் நோக்கமாகும். இந்த தினத்தை உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக கொண்டாடுகின்றன. அதன் ஒரு பகுதியாக, விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகள் தவறாமல் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, அரசாங்கமும் அதன் இயந்திரங்களும் சிறுபான்மையினரின்…

மேலும் படிக்க

பாபரி மஸ்ஜித்: வீழ்ச்சியிலிருந்து எழுச்சிபெறும்

பாபரி மஸ்ஜிதின் தீர்ப்பை கடந்த நவம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் வழங்கியது. நீதி வேண்டி இவ்வளவு காலம் காத்திருந்த முஸ்லிம் சமூகத்திற்கு முன்னுதாரணமற்ற அநீதியான தீர்ப்பினை வழங்கியது நீதிமன்றம். எல்லா சூழ்நிலைகளிலும் நீதிமன்றத்தை மட்டும் எதிர்ப்பார்த்து ஜனநாயக வழியில் உரிமைக்காக போராடியவர்களுக்கு இந்த தீர்ப்பு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது. உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதி நிலைநாட்டப்படும் என நம்பிய மக்களுக்கு துரோகத்தை பரிசாக தந்துள்ளது நீதித்துறை. இந்த தீர்ப்பு ஜனநாயகத்தை வேண்டி நிற்கும் குடிமக்களுக்கு அதிர்ச்சியையும், முஸ்லிம் சமூகத்திற்கு விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பாபரி மஸ்ஜிதை இடித்த போது ஏற்பட்ட துயரத்தை விட, குற்றவாளிகளுக்கு சாதகமான முடிவை அளித்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் காயம்பட்ட புண்ணில் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் முடிந்துவிட்டது; சாமான்யனுக்கு நீதி இனி கிடைக்காது என முஸ்லிம் சமூகம் மனம் தளர்ந்துவிட்டது..

மேலும் படிக்க

அறியப்படாதவர்கள்

மதீனாவின் ஆட்சியாளராக உமர் (ரலி) வீற்றிருந்த சமயம் அது. யெமன் நாட்டில் இருந்து உதவிப் படைகள் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் அவர்களிடம் சென்று ‘உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் இருக்கிறாரா?’ என்று கேட்பது உமர் (ரலி) வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அவ்வாறு வந்த படையினரிடம் சென்ற உமர் (ரலி), உவைஸ் பின் ஆமிரிடம் நேரடியாகச் சென்று ‘நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?’ என்று கேட்டார்கள். அவர் தான்தான் உவைஸ் பின் ஆமிர் என்று கூறியவுடன், நீர் முராத் கோத்திரத்தையும் கர்ன் குலத்தையும் சார்ந்தவரா என்று ஜனாதிபதி கேட்க, உவைஸ் நேர்மறையாக பதிலளித்தார். கேள்விகள் தொடர்ந்தன.

‘நீர் தொழுநோயால் பாதிக்கப்பட்டீரா? பின்னர் அது ஒரு நாணயத்தின் அளவு குறைந்து போகும் அளவிற்கு அல்லாஹ் அதனை குணப்படுத்தினானா?’
‘ஆம், குணப்படுத்தினான்.’
‘உமது தாயார் உயிருடன் உள்ளாரா?’
‘ஆம், உயிருடன் உள்ளார்.’

மேலும் படிக்க

ரெளலட் மசோதாவை எதிர்த்து மத்திய சட்டசபையில் வாக்களித்த 22 பேர்களில் 5 பேர்கள் முஸ்லிம்கள், ஆதரித்து வாக்களித்தவர்கள் 35 பேர்கள். இதோ அவர்களது பட்டியல்;
ரௌலட் சட்டத்தை எதிர்த்தவர்கள்
1. கங்காதர்சித்நவிஸ், 2. பாபு எஸ்.என். பானர்ஜி, 3. மொகுமதாபாத் ராஜா, 4. டி.பி. சாப்ரூ, 5. பண்டித மதன்மோகன் மாளவியா, 6. எஸ். சாஸ்திரி, 7. பி.என். சர்மா, 8. வி.ஜ. படேல், 9. சர் பசுல்பா கரீம்பாய், 10. ராய் சித்தாந்தராய் பகதூர், 11. ராஜா சர் ராம்பல்சிங், 12. ராய் கிருஷ்ணசகாய் பகதூர், 13. கனிகாவின் ராஜா, 14. ஜி.எஸ். காப்பரேட், 15. ராய் பி.டி. சுக்குல்பகதூர், 16. கே.கே. சந்தா, 17. மாங்பாதூ
ரௌலட் சட்டத்தை எதிர்த்த முஸ்லிம் உறுப்பினர்கள்

மேலும் படிக்க

40. தேவாலயத்தில் இஸ்லாமிய பிரச்சாரம்

“ஹலோ மிஸ்டர் எல்டர் மிஷாவ். எப்படி இருக்கீங்க? இந்தப் பக்கம்” எல்டர் மிஷாவ்வுடன் கை குலுக்கினார் ஹூவர். ஆச்சரியத்தோடு மிஷாவ்வைப் பார்ப்பதாக காட்டிக் கொண்டாலும், அவரை விரைவிலேயே சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடுதான் இருந்தார் ஹூவர்.
வெள்ளை மாளிகையில் அதிபர் கென்னடியைச் சந்திக்க வந்திருந்த இடத்தில், தன்னிடம் கைகுலுக்குபவர் யார் என அறியாமல் சற்று தடுமாற்றத்தை முகபாவணையில் வெளிப்படுத்தினார் மிஷாவ். இதை ஹூவரும் புரிந்து கொண்டார்.
“நான்தான்

மேலும் படிக்க

தீயோருக்கு அஞ்சாதே

முஸ்தஃபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை முஸ்தஃபா வீட்டிற்கு வந்ததும் அப்துல் கரீம் அவரிடம் ஓட்டமாய் ஓடினான்.

‘அத்தா! நம்ம பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?’

கரீமின் உம்மா மதியமே தன் கணவருக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல், ‘என்னாச்சு?’ என்று விசாரித்தார் முஸ்தஃபா. மேலும் படிக்க

ஆடை கலாச்சாரம்

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (அல்குர்ஆன் 7: 26)
பழங்காலத்தில் பருவநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே மனிதன் ஆடைகளை அணிந்தான். மறைவான உறுப்புக்களை மறைக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமல்ல. அரபிகளும் அவ்வாறு தான்…

மேலும் படிக்க

Comments are closed.