புதிய விடியல் – 2020 ஜனவரி 16-31

0

அகல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்!

நாட்டின் பொருளாதாரத்தை குறித்த கவலையளிக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. 2019-2020 நிதியாண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (ஜி.டி.பி) வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று புள்ளியியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஒ) சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.கடந்த நிதியாண்டில் இது 6.8 சதவீதமாக இருந்தது.

சில வாரங்களுக்கு முன்பு நாடு தற்போது அசாதாரணமான பொருளாதார மந்த நிலையை சந்திப்பதாக நரேந்திர மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.கடந்த ஏழு  காலாண்டு புள்ளி விபரங்களிலும் இந்தியாவின் ஜி.டி.பி  வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளதையே அரசின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் எட்டு…

மேலும் படிக்க

இனப்படுகொலைக்கு சாமரம் வீசும் சமாதான புறா!

1991இல் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் மியான்மரின் ஆங் சான் சூ கி. அந்நாட்டின் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராடிய இவர் பல்லாண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் முகமாகவே பார்க்கப்பட்ட ஆங் சான் சூ கி-க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது உலகம் அவரை ஆரத் தழுவியது. ஆனால் 25 வருடங்கள் கழித்து அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எழுந்தது. ரோகிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலை விவகாரத்தில் இனப்படுகொலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்ததே இந்த கோரிக்கைக்கான காரணம்.

2019 டிசம்பர் 10 முதல் 12 வரை நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில்

மேலும் படிக்க

வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது

அக்டோபர் மாதம் முதல் கட்டண உயர்வு உள்ளிட்ட விசயங்களை கண்டித்து தங்களின் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடி வரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர்கள் மீது ஜனவரி 6 அன்று கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. முகங்களை மறைத்து தாக்குதல் நடத்தியவர்கள் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு காவல்துறை உதவி நல்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய ஜாமியா மில்லியா  இஸ்லாமியா…

மேலும் படிக்க

முட்டாள்தனமான, அவமானப்படுத்துகிற, வீணான… NRC

30மில்லியன் நிலமில்லாத மக்கள்

30மில்லியன்  மக்கள் நம் நாட்டில் சொந்த நிலம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். (இந்த புள்ளி விபரம் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னெடுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவில் -றிவிவிசீ இருந்து பெறப்பட்டது) கேள்வி என்னவெனில் 30 மில்லியன் மக்களுக்கு நிலம் இல்லையெனில் அவர்கள் ழிஸிசி யில் எந்த நிலத்தின் ஆவணங்களை சமர்ப்பிப்பார்கள்..?

17 மில்லியன் வீடில்லா மக்கள்

17 மில்லியன் மக்கள் வீடில்லாமல் மேம்பாலங்களுக்கு அடியிலும், நடைபாதைகளிலும், மழைக் கூடாரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இது மத்திய அரசின் கணக்கெடுப்பு நிறுவனத்தால்..

மேலும் படிக்க

முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி சாதகமா? பாதகமா?

இந்திய முப்படைகளையும் அதன் பிற துறைகளையும் வழிநடத்தும் ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து அதன் முதல் தளபதியாக பிபின் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கூடி  இது சம்பந்தமாக விவாதித்தது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து புதிய தலைமை தளபதியை…

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்

ரௌலட் சாஸ்திரி

ரௌலட் கமிட்டியிலிருந்த சி.விடகுமாரசாமி சாஸ்திரி தமிழர். இவர் தமிழினத்தின் துரதிர்ஷ்டம். இவரை இக்கமிட்டியிலிருந்து விலகச் சொல்லி காங்கிரசார் செய்த கிளர்ச்சிகள் பயனற்றதாகப் போயிற்று. இந்து நாளிதழ் Ôரௌலட் சாஸ்திரிÕ என்று இவரைக் கண்டித்து எழுதியது. இந்து பத்திரிகை விற்பனை அதிகம் ஆனது. 1916 இல் 500 பிரதிகள் இந்து இதழ் விற்பனை ஆனது. 1917 இல் 6400, 1918 இல் 7200, 1919 இல்

மேலும் படிக்க

  1. அபாயகரமான நட்பு

இயக்கப் பணிகளுக்காக ஒவ்வொரு நகராக பறந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது ஹார்லெம் பள்ளிவாசலை ஒட்டியிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவு விடுதியில், ஆசுவாசம் அடைந்து கொள்வேன், நெருக்கமான இயக்கச் சகோதரர்களோடு அளவளாவுவதன் மூலம் அந்தச் சந்திப்பையும்கூட சிறிய ஆலோசனைக் கூட்டமாக மாற்றிவிடுவேன்.

மேலும் படிக்க

சமூக வீழ்ச்சிக்கு எதிராக

“நிராகரிப்பாளர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.(அது) மிகவும் அற்ப சுகம்.பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.”(அல்குர்ஆன் 3:196,197)

செல்வமும், பலமும், அதிகாரமும் ஒருங்கிணையும் இடத்தில் இயல்பாகவே செல்வாக்கு அதிகரிக்கும்.ஒரு எல்லை வரை மட்டுமே அவர்களுக்கு ஆயுத பிரயோகம் தேவைப்படும்…

மேலும் படிக்க

எறும்புகளிடம் காணப்படும் சமூக பாடங்கள்

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கிவிடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று. (அல்குர்ஆன் 27:18)

சுலைமான் நபி (அலை) அவர்கள் தனது சாம்ராஜ்ஜியத்தை பாதுகாப்பதற்கு தேவையான படைகளுடன் ஒரு பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அருகில் ஒரு எறும்பு தனது சமூகத்தாரிடம் நடத்திய ஆச்சரியமான உரையாடலை அல்லாஹ் சுலைமான் நபி (அலை) அவர்களுக்கு கேட்கும்படி செய்தான். அதைத்தான் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் படிக்க

Comments are closed.