புதிய விடியல் – 2020 மார்ச் 1-15

0

சென்னையின் ஷாஹின் பாக்!

வரிசைக்கட்டி நிற்கின்றன காவல்துறை வாகனங்கள். ஆங்காங்கே காவலர்கள் நின்றுகொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர்.  குறுகலான சாலை அது. அந்த சாலை வழியே கடக்கும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, டிராபிக் எதுவும் இல்லாமல் அனுப்பி வைக்கிறது இளைஞர்கள் கூட்டம். இதனை அவர்கள் நேர்த்தியாக செய்துகொண்டிருக்கின்றனர். காவல்துறை அவர்களின் உதவிக்கு வரவில்லை. அப்படியே கடந்து முன்னே சென்றால், மேடையை பார்த்தவாறு ஆண்கள் சாலையில் அமர்ந்து தலைவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இடை இடையே, ‘ஆசாதி’ ‘ஜிந்தபாத்’ மற்றும் என்ஆர்சி எதிர்ப்பு முழங்கங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். குழுமியிருந்தவர்களின் கரங்களில் இந்தியாவின் தேசியக் கொடி…

மேலும் படிக்க

தலைநகரில் அரங்கேறும் அரச பயங்கரவாதம்

பிப்ரவரி 23 அன்று தலைநகர் டெல்லியில் இந்துத்துவ குண்டர்கள் தொடங்கிய வன்முறை கட்டுக்கடங்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதனை குலைப்பதற்கு இந்துத்துவ வெறியர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஓர் பகுதியாக டெல்லி ஜாஃபராபாத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எதிராக எதிர் போராட்டத்தை தொடங்கிய பா.ஜ.க.னர் பிரச்சனையை தோற்றுவித்தனர். “மூன்று நாட்களுக்குள் போராட்டக்காரர்கள் இல்லாமல் சாலைகளை கிளியர் செய்ய வேண்டும். இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சென்ற பிறகு நீங்கள்…

மேலும் படிக்க

செய்தித் துளிகள்

உணவிலும் பாசிசமா?

தமிழ் நாட்டின் மதிய உணவு திட்டம் சமூக நீதிக்கான அடையாளமாக திகழ்வதுடன் உலக அளவில் பிரசித்து பெற்றது. தற்போதைய அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம் இதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சென்னை மாநகரில் உள்ள 32,000 பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் ஒப்பந்தத்தை அக்க்ஷய பாத்திரா என்ற அரசு சாரா நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது. கவர்னரின் நிதியில் இருந்த இதற்கு ஐந்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய திட்டத்தை எதற்காக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்?..

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படையினர்!

இந்திய இராணுவ ரகசியங்கள் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கப்பட்டதாக அவ்வப்போது உலா வரும் செய்திகளை போன்று மீண்டும் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இந்திய கடற்படையிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல் கிடைப்பதாக ஆந்திர மாநில உளவுத்துறை கண்டறிந்த தகவலின் அடிப்படையில் மத்திய உளவுப்பிரிவினரும் கடற்படை உளவுப்பிரிவினரும் சேர்ந்து “ஆபரேஷன் டால்ஃபின் நோஸ்” எனும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் மூலம் 20.12.2019 அன்று 7 கப்பற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து இதுவரை 11 கப்பற்படை வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடங்களின் மூலம் இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பெண்களை வைத்து அல்லது..

மேலும் படிக்க

சிரியா: பிரச்சனையை தீவிரமாக்கும் சர்வதேச சமூகத்தின் மௌனம்

சிரியாவில் இருந்து வெளியான நான்கு வயது சல்வாவின் வீடியோ பார்ப்பவர்களை நெகிழச் செய்தது. போர் விமானங்களின் சத்தத்தை கேட்டு அழுத தனது மகளின் அச்சத்தை போக்குவதற்காக அச்சத்தத்தை கேட்கும் பொழுது சிரிக்குமாறு அவளை பழக்கியுள்ளார் சல்வாவின் தந்தை. போர் விமானத்தின் சத்தம் கேட்கும் போது தனது அச்சத்தை மறைத்து கபடமில்லாமல் சிரிக்கிறாள் சல்வா. சல்வா சிரித்தாலும் சீறும் விமானங்கள் தங்களின் இலக்குகளை அழிக்காமல் இருப்பதில்லை. இது நிரந்தர தீர்வல்ல என்பதை உணர்ந்துள்ள சல்வாவின் தந்தை, “ஒரு நாள் இது மரணத்தின் சத்தம் என்பதை அவள் அறிந்து கொள்வாள்” என்கிறார். சிரியாவின் தற்போதைய நிலையை சுருக்கமாக விளக்குவதாக இந்த வீடியோ அமைந்திருந்தது.

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்

4.4.1919 அன்று டில்லி ஜும்ஆ மசூதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. பள்ளிவாசலில் சுவாமி சிரத்தானந்தர் உரையாற்றினார்.

இந்துக்களும் முஸ்லிம்களும் டில்லியிலும் பம்பாயிலும் ஓர் உருவாய் இணைந்து நின்று ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராடினார்கள். இந்து—-முஸ்லிம் ஒற்றுமை உறுதிமொழி ஏற்க மற்றொரு கூட்டமும் பம்பாயில் நடைபெற்றது.

காந்தி கைது…

மேலும் படிக்க

  1. இயக்கத்தின் முதல் ஷஹீத்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 27-ம் எண் பள்ளிவாசல் பிரதான சாலையிலேயே அமைந்திருந்தது. அன்று வெள்ளிக்கிழமையாதலால், ‘பண்பாட்டு இரவு’ நிகழ்ச்சியில், முஸ்லிம்கள் குடும்பங்களாக பங்கெடுத்துக் கொண்டனர். ஏப்ரல் 27-ம் தேதி இரவு இரத்தக் கறை தோய்ந்த இரவாக மாறும் என அவர்கள் நினைக்கவில்லை…

மேலும் படிக்க

நேரத்தின் மதிப்பறிந்து செயல்படுவோம்

இளைஞர்களே! உங்கள் ஆற்றல் நாட்டின் தலையெழுத்தையே மாற்றவல்லது என்பதனை தற்போது நடந்து கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்ட காட்சிகளே சாட்சி. என்னை போன்று உலகமே தற்போது அவற்றை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது…

மேலும் படிக்க

நீதியை கேட்காவிட்டால்!

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்; அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து…

மேலும் படிக்க

Comments are closed.