புதிய விடியல் – 2020 மார்ச் 16-31

0

மத, சாதி வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் என்.ஆர்.சி., என்.பி.ஆர்.!

டெல்லி கலவரம், நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம், சி.ஏ.ஏ., கஷ்மீர் விவகாரம், இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட சமகால நிகழ்வுகள் குறித்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுடன் உரையாடினோம்.

டெல்லி கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்திய நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்து?

மிகக் கொடூரமான டெல்லி கலவரத்தில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் மிகப் பெரும்பான்மையாக இஸ்லாமிய சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

மேலும் படிக்க

சி.ஏ.ஏ: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு அசாதாரணமானதா?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்திற்கு அமிக்கஸ் க்யூரியாக இணைய ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது மத்திய மோடி அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இயற்றப்படும் ஒரு சட்டம், சட்டத்திருத்தத்திற்கு எதிராக வெளியில் உள்ள ஒரு அமைப்பு தலையிடுவது அசாதாரணம் என்று சுட்டிக்காட்டி வெளியுறவுத்துறை

அமைச்சகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பாகுபாட்டிற்கு எதிரான சர்வதேச…

மேலும் படிக்க

சாதியை மறைத்து வாழவேண்டிய இழிநிலை இஸ்லாத்தில் கிடையாது

அண்மையில் இஸ்லாத்தை தழுவிய சமூக செயற்பாட்டாளரும் Ôதலித் கேமரா’ யூ ட்யூப் சேனலின் நிறுவனருமான ஊட்டி கோத்தகிரியைச் சேர்ந்த டாக்டர் ரவிச் சந்திரன் பத்ரன் (ரயீஸ் முஹம்மது) தேஜஸ் இதழுக்கு அளித்த பேட்டி…

இஸ்லாத்தை தழுவுவதற்கு உங்களை தூண்டிய காரணிகள் என்ன?

இஸ்லாத்தை தழுவியது ஏன்? என்ற கேள்வியை விட ஏன் இந்து மதத்தை கைவிட்டேன்? என்பது பொருத்தமான கேள்வியாக இருக்கும். இந்து மதத்திலிருந்து வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான சிலவற்றை நான் கூறுகிறேன்.

தலித்களாகிய நாங்கள் இந்து மதத்தில்…

மேலும் படிக்க

போதை, ஆபாசத்திற்கு முடிவுரை எழுதுவோம்

இத்தொடர் துவங்கிய பின் ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். பல்வேறு கருத்துகளை விவாதித்த அந்த இளைஞர் ஒரு சட்டக் கல்லூரி மாணவர். அப்போது அவரிடம் ‘மாணவ சமூகத்தின் இன்றைய சவாலாக எதனை பார்க்கின்றீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆபாச படங்கள் பார்ப்பதும், போதை உட்கொள்வதை தவறாக கருதாததும்’ என்று கூறினார்.

இன்றைய நவீன உலகில் ஆபாச படங்கள் பார்ப்பதும், போதை உட்கொள்வதும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இதை இன்றைய இளைய சமூகத்தின் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த தீய நோய்களால் நோய்களால் பீடிக்கப்பட்டு சீர்கேட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அரசின் அணுகு முறையும் ஒரு காரணம்.

மதுவுக்கு எதிராக விளம்பரங்களை செய்யும் அரசு மது கடைகளில் கல்லா கட்டுவதுஎப்படி என்கிற ஆய்வுகளையும் மேற்கொள்கின்றது. அதுவும் திருவிழா மற்றும் பண்டிகை தினங்களில் கடந்த ஆண்டின் வருவாயை விட எவ்வாறு அதிகம் ஈட்டுவது என்று திட்டங்களை வகுக்கின்றது. அரசின்…

மேலும் படிக்க

செய்தித் துளிகள்?

கருத்து சுதந்திரம்!

கேரளாவின் ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணிநேர தடையை, மார்ச் 6 மாலை 7.30 மணி முதல், மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விதித்தது. தடைக்கு அரசாங்கம் கூறிய காரணங்கள் வினோதமானவை… டெல்லி வன்முறையில் வழிபாட்டுதலங்கள் மீதான தாக்குதல்களை ஒளிபரப்பி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டது, டெல்லி காவல்துறை மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை குற்றம் சாட்டியது போன்ற காரணங்களுக்காக தடை விதித்தது அமைச்சகம்.

மத்திய அரசின் இந்த போக்கை பலரும் கண்டித்ததை தொடர்ந்து தனது அறிவிப்பை அரசாங்கம் சில மணிநேரங்களில் விலக்கிக் கொண்டது. கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் எமர்ஜென்சியை அரசாங்கம் அவ்வப்போது நம் கண் முன் காட்டுகிறது.

டெல்லி வன்முறைக்கு ஈரான் கண்டனம…

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்கின் கதாநாயகன் டாக்டர் சைபுதீன் கிச்சலு

முஸ்லிமான டாக்டர் சைபுதீன் கிச்சலு அமிர்தசரஸிலும் பின்னர் அலிகார் கல்லூரியில் படித்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர். பாரிஸ்டர் பரீட்சையில் தேறியவர். பி.எச்.டி பட்டமும் பெற்றவர். பிரிட்டனில் ஐந்தாண்டு காலம் வாழ்ந்தவர். ராவல் பிண்டியில் வழக்கறிஞராக இருந்து விட்டு பின் 1915 ஆம் வருஷத்தில் அமிருதசரஸிற்கு வந்து பணியாற்றி, சமூகப் பணிகளிலும் பங்கெடுத்தவர்…

மேலும் படிக்க

46. பழிதீர்த்த லாஸ்ஏஞ்சல்ஸ் போலீஸ்

அடுத்த நாளே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விரைந்தேன். சகோதரர் ரொனால்ட் ஸ்டோக்ஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவர் மனைவி சகோதரி டெலோரஸ் ஸ்டோக்ஸ்-க்கு ஆறுதல் கூறினேன்.

தன்னுடைய மூன்று மாத பெண் குழந்தை சவூதியா-வை தோளில் தூங்க வைத்துக் கொண்டு, வேதனை தாங்காமல் டெலோரஸ் விம்மினார்…

மேலும் படிக்க

வாழ்க்கை தற்காலிகமானது

“மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை, அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! ‘‘அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது.- மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்…

மேலும் படிக்க

Comments are closed.