புதிய விடியல் – 2020 அக்டோபர் 1-15

0

காவிமயமாக்கப்படும் சிவில் சர்வீஸ்!

இந்துத்துவ அரசியலின் வரலாற்றையும், அதன் நோக்கங்களையும் தோலுரிக்கும் வகையில் முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ள பிரபல பத்திரிகையாளர் நிலஞ்சன் முகோபாத்யாயா, சிவில் சர்வீஸை இலக்காகக் கொண்ட சங்பரிவார சக்திகளின் திட்டங்களை வெளிப்படுத்தும், ‘இந்தியாவில் வளர்ந்து வரும் அதிகாரத்துவ மையங்களில் சங்பரிவாரம் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?’ என்ற தலைப்பில் 2016ல் எழுதிய கட்டுரையில் இவ்வாறு விவரிக்கிறார்:

‘சிவில் சர்வீஸை இலக்காகக் கொண்டு இந்துத்துவ கருத்தாக்கத்தின் ஒரு பகுதியாக டெல்லியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சம்கல்ப் (ஷிகிவிரிகிலிறி) என்ற நிறுவனம். வட இந்தியாவின் மாநகரங்களிலும்,

மேலும் படிக்க

உளவு வேலை: முழுமையான விசாரணை தேவை!

சீனாவுக்காக உளவு பார்த்ததாக பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம். லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து மோதல் சூழல் நிலவும் வேளையில் ராஜீவ் சர்மா நாட்டின் விலை மதிப்பு மிக்க தகவல்களை சீனாவுக்கு கசிய விட்ட செய்தி வெளியானது. எல்லையில் இந்தியாவின் உத்திகள், டோக்லாம் முதலான இந்தியா-சீனா-பூடான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம், ஆயுத சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முதலான நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் முக்கிய தகவல்களை ராஜீவ் சர்மா சீன உளவுத்துறைக்கு அளித்துள்ளார்.

சர்மாவின் அடுக்குமாடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்…

மேலும் படிக்க

அப்பாவிகளை பழிவாங்கும் டெல்லி காவல்துறை

பிப்ரவரி மாதம் தலைநகர் டெல்லியில் இந்துத்துவ வெறி கும்பல் ஆடிய வன்முறை வெறியாட்டங்களை யாரும் மறக்க முடியாது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறை  வெறியாட்டத்தில் சங்பரிவார் கும்பலுடன் காவல்துறையும் இணைந்து செயல்பட்டது இருவருக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்தியது. பெரும்பான்மை பாதிப்புகளை முஸ்லிம் சமூகம் சந்தித்தபோதும் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலும் முஸ்லிம்களே அதிகமாக உள்ளனர்.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பிப்ரவரி 24 முதல் நான்கு நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை…

மேலும் படிக்க

விவசாயம் ஓர் இஸ்லாமியப் பார்வை

2020 செப்டம்பர் ஐந்தாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இத்தருணத்தில் வேளாண்மை மற்றும் விவசாயம் குறித்த இஸ்லாமியப் பார்வையை பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.

மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு

நம்முடைய ஜனநாயக திருநாட்டில் மக்கள் மிகப்பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருப்பது இந்த பா.ஜ.க. அரசின் ஆட்சிக் காலத்தில்தான்.

மதவாதம், பிரிவினைவாதம், வகுப்பு அரசியல் என்கின்ற தங்களது இயல்புகளை எல்லாம் கடந்து மக்களை வஞ்சித்து அவர்களது வாழ்வாதாரங்களை முடங்கச் செய்யும் செயல்திட்டங்களையே பா.ஜ.க. தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

பண மதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை மற்றும் … 

மேலும் படிக்க

சைபர் பாதுகாப்பும் மக்கள் கண்காணிப்புகளும்

நாட்டின் குற்றங்களை கட்டுப்படுத்த ஆலோசனை கேட்ட மன்னருக்கு, மங்குனி மந்திரி ஒரு ஆலோசனை சொன்னார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உயர்ந்த கோபுரங்களை கட்டி, அதில் வீரர்களை நிறுத்தி மக்களை கண்காணித்தால் குற்றங்களை தடுக்கலாம் என்றார் அமைச்சர். அமைச்சரின் ஆலோசனை நிறைவேற்றப்பட்டது. குற்றங்கள் குறைந்தாலும் முழுவதுமாக ஒழியவில்லை. ஆனால் தற்போது கண்காணிப்பு கோபுரங்களின் காவலர்களுக்கு மக்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே

தெரிந்தனர். மக்களும் அரசரை விட்டு தூரமாகினர். மன்னனுக்கும் மக்கள் மீது சந்தேகப் பார்வையே இருந்தது. கோபுரங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ‘நாட்டின் பாதுகாப்பு’ என்ற பெயரில் உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

இந்த கதைக்கும் தற்போதைய நிகழ்வுகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. பாதுகாப்பு என்ற பெயரில் எதையும் செய்ய… 

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்

துப்பாக்கிச்சூடு நடைபெற்று முடிந்ததும், காயம்பட்டவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் இருக்கின்றனவா என்று வக்கீல் மக்பூல் மாமூது கேட்டார். சிப்பாய்கள் அதற்கு இடங்கொடுக்கவில்லை.

துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும், சிலர் திரும்பிச் சென்றனர். திரும்பிச் சென்றவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிப் பிரயோகமின்றியே இந்தக் கூட்டத்தைக் கலைத்திருக்கலாம். அநேக மக்களுக்கு இடுப்புக்கு மேலே காயம்பட்டிருந்தது. பல துக்ககரமான காட்சிகள் அரங்கேறின. 16 அல்லது 17 வயது சிறுவன் வயிற்றில்..

மேலும் படிக்க

  1. குத்துச்சண்டை வீரரை திணறடித்த இயக்கம்

அரங்கத்தில் கூட்டமே இல்லை. பணத்துக்காக முன் கூட்டியே வெற்றி- தோல்வியை தீர்மானித்து களமிறங்கும் குத்துச்சண்டை வீரர்களும் அவர்களை இயக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களும் குத்துச்சண்டை விளையாட்டுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருந்தனர்.

1962-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி, நியூயார்க் நகரில் உள்ள செயின்ட் நிகோலஸ் அரங்கில் வெறும் 1642 பேர்

மேலும் படிக்க

நீதிக்கான குரல்

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம்,’ஜிஹாதில் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள்,’அக்கிரமக்கார ஆட்சியாளனின் முன்னால் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும்’ என்றார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சம நீதி, சுதந்திரம், பாதுகாப்பு, சம உரிமைகளையும் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும். அரசிடமிருந்து …

மேலும் படிக்க

Comments are closed.