புதிய விடியல் – 2020 நவம்பர் 1-15

0

UPSC ஜிகாத்? இந்துத்துவாவின் புதிய பிரச்சாரம்!

சிவில் சர்வீஸ் மற்றும் இராணுவத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை குறைப்பதற்காக வெறுப்பு பிரச்சாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது.

மதத்தின் அடிப்படையில் வெறுப்பை விதைத்து மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வேகமெடுத்துள்ளன. பட்டிதொட்டிகள் தொடங்கி முஸ்லிம் விரோத பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. சமூக ஊடகங்களும் பெரும்பான்மை தொலைக்காட்சி சேனல்களும் இதற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சொற்ப எண்ணிக்கையில் தேர்ச்சி பெறும் முஸ்லிம்களை குறிவைத்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘யுபிஎஸ்சி ஜிகாத்’ என்ற…

மேலும் படிக்க

கிரிமினல் சட்ட திருத்தம்: பின்னணி என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நபர் மீது காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை தொடர்ந்து பெங்களூர் நகரில் ஆகஸ்ட் மாதம் கலவரம் ஏற்பட்டது. முஸ்லிம்களை வேட்டையாடுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திய காவல்துறை முன்னூறுக்கும் அதிகமான நபர்களை கைது செய்தது. 163 முஸ்லிம்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல்துறை குறிப்பிடும் நேரத்தில் தனது வீட்டில் இருந்துள்ளார். அதற்கான சிசிடிவி ஆதாரங்களை அந்நபரின் மனைவி வைத்துள்ள போதும் விசாரணை தொடங்கும் போதுதான் அவற்றை சமர்ப்பிக்க முடியும் என்று வழக்கறிஞர்கள்…

மேலும் படிக்க

சைபர் பாதுகாப்பும் மக்களை உளவு பார்த்தலும்: சைபர் யுத்தத்தின் பரிணாமம்

ஈரான் ஒரு அணுசக்தி நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் 2010 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தது. அணு உலையில் செறிவூட்டப்படும் யூரேனியத்தை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் பிற  சிவில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றியடைந்தால் தற்சார்பு தேசமாக கூடிய விரைவில் ஈரான் உருவாகும் என அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அஹ்மதிநஜாத் அறிவித்திருந்தார். ஆனால் இதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கான அச்சுறுத்தலாகவே பார்த்தன.

ஈரானின் அணுஉலை திட்டமானது மத்திய கிழக்கு நாடுகளின்…

மேலும் படிக்க

மதுரா – காசி… அடுத்த இலக்கு?

“அயோத்தியா தோ ஸிர்ப் ஜாங்கி ஹை, காசி மதுரா பாக்கி ஹை” (அயோத்தி ஒரு துவக்கம் மட்டுமே, காசியும் மதுராவும் மீதம் இருக்கின்றது.)

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் பாசிச சங்பரிவார சக்திகளால் இடித்து  தரைமட்டமாக்கப்பட்ட  பிறகு சங்பரிவார் சக்திகளால் முழங்கப்பட்ட முழக்கம் தான் இது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் நவம்பர் 9, 2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்புக்குப் பின் உ.பி.யில் உள்ள மதுரா மற்றும் காசியை நோக்கிய தங்களின் பயணத்தை தெளிவாக அறிவித்தது

வி.ஹெச்.பி.

அது என்ன மதுரா, காசி பிரச்சனை?

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஈத்கா மஸ்ஜிதை கிருஷ்ண ஜென்ம ஸ்தான் (கிருஷ்ணர் பிறந்த இடம்), அங்கிருந்த கோவிலை முகலாய…

மேலும் படிக்க

பிரான்ஸின் இஸ்லாமிய விரோத போக்கு!

இஸ்லாத்தை அவ்வப்போது வம்புக்கிழுப்பது இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு கொண்டவர்களின் வாடிக்கை. முஸ்லிம்களின் புனித வேதம் குர்ஆன் மற்றும் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய முகம்மது நபி (ஸல்) குறித்து அவதூறுகளை அள்ளித் தெளித்து அதனை கருத்துரிமை என்று வெட்கமின்றி சொல்லவும் செய்வார்கள். இது ஏதோ குறுமதி கொண்ட சிலரின் மனப்பிறழ்வு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாமிய வெறுப்பு உலகில் தங்குதடையின்றி மேற்கொள்ளப்படும் வியாபாரம் என்று கூறலாம்.

பிரான்ஸில் வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை நபி (ஸல்) அவர்களை அவமானப்படுத்தும் விதமாக சித்திரங்களை வெளியிட்டது. உருவ வழிபாடு இல்லாத இஸ்லாமிய மதத்தில் அவர்களின் தூதரை சித்திரமாக வரைவதற்கும் அனுமதி கிடையாது என்பதை நன்கறிந்தே இந்த இழிசெயலை அவர்கள் செய்தனர். 2011இல் முதலில் இத்தகைய சித்திரங்களை வெளியிட்டாலும் முஸ்லிம்கள … 

மேலும் படிக்க

ஜாலியன் வாலாபாக்

ஜனக்கூட்டத்தார் அப்பொழுது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

நல்லது. அவர்கள் ஒரு மீட்டிங் நடத்திக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவில் ஒரு உயர்ந்த இடத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கைகள் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தன. அவர் உண்மையாகவே பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.

நீரும் உம்முடைய சிப்பாய்களும் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் அவரிருந்த இடத்திற்கும்…

மேலும் படிக்க

  1. அல்ஜீரியப் போராளியுடன்

வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் தேக்கத்தையும் கையறுநிலையையும் போக்க, எனக்கு துணையாக இருப்பது வாசிப்பும் பேச்சும்தான். சோகங்களை எல்லாம் உதறித் தள்ளி உற்சாகமாக துள்ளியெழுந்து ஓட வைப்பது, ஆதர்ச ஆத்மாக்களைச் சந்திக்கும் தருணங்கள்தான்!

கானா அதிபர் க்வாமே நுக்ருமா போல என் ஆதர்ச நாயகர்களின் பட்டியலில் இருக்கும் இன்னொருவரை…

மேலும் படிக்க

குர்ஆனை இதயத்தில் இறக்கி வைப்போம்!

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய…

மேலும் படிக்க

Comments are closed.