புதிய விடியல் – 2020 டிசம்பர் 1-15

0

வலதுசாரிகளின் எழுச்சியும் மரடோனாவின் மரணமும்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மரணம், வலதுசாரிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம். நிச்சயம் அப்படித்தான் இருக்கும். ஒரு விளையாட்டு வீரனின் மரணத்தை, யாரும் கொண்டாட முடியாதுதான். விளையாட்டு வீரன் மட்டுமல்ல, எதிரியே இறந்தாலும், அந்த இழப்பால் மகிழ்வது மனநோயாளிகளாகத்தான் இருக்க முடியும்.

அர்ஜெண்டின கால்பந்து வீரர் டீகோ மரடோனாவின் மரணம் விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு ஜாம்பவானின் இழப்பாக இருக்கலாம். கால்பந்து உலகில் இன்னொரு மரடோனா உருவாகலாம். காலம் உருவாக்கிவிடும். ஆனால், உலகம் …

மேலும் படிக்க

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் நோக்கம் என்ன?

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் லவ் ஜிஹாத்’துக்கு எதிரான அவசர சட்டத்துக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெரும்பாலான ஊடகச் செய்திகள் இதை Ôலவ் ஜிஹாத்’க்கு எதிரான அவசரச்சட்டம் என்று கூறுகின்றன. ஆனால், உ.பி. அரசு இது, ‘லவ் ஜிஹாத்’க்கு எதிராக மட்டுமல்ல, கட்டாய மதமாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கானது என்று கூறுகிறது.

இந்த சட்டப்படி கட்டாய மதமாற்றம் செய்தால் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பருவ வயதை அடையாதவர்களை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரைச் சேர்ந்த பெண்களை மதம் மாற்றி …

மேலும் படிக்க

நல்லொழுக்க முகாம் நடத்தியதற்கு வழக்கா?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நல்லொழுக்க பயிற்சி முகாம்களையும் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில்   இளைஞர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்தோடு முகாமில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 23ஆம் தேதி இரவு ஒரு மணி அளவில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு கார்த்திக் ஐபிஎஸ் தலைமையிலான…

மேலும் படிக்க

மத அரசியல் செய்யும் பா.ஜ.க. இந்துகளுக்கு என்ன செய்தது?

`இது இந்துக்களுக்கான கட்சி’ என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்ல வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு நோட்டில் எழுதி மனப்பாடம் செய்ய மட்டும்தான் சொல்லவில்லை. மற்றபடி மூச்சுக்கு முன்னூறு முறை Ôநாங்கள் இந்துக்களுக்கான கட்சி’ என்று கூவுபவர்களிடம், Ôசார் Ôநீட்’ தேர்வுங்குற பேர்ல நம்ம இந்துக்கள படிக்க விடமாட்றாங்க. வாங்க போராடலாம்’ என்று கைகோர்த்தால், ÔÔதம்பி பழக்கவழக்கமெல்லாம் கலவரம் செய்றதோட நிறுத்திக்கணும். படிக்கணும்னு ஆசப்படக்கூடாது” என தட்டி விடுகிறது பாரதிய ஜனதா கட்சி.

Ôகலவரம் செய்யவும், பிரியாணி அண்டா திருடவும் மட்டும்தான் நாங்களா?’ என்று இந்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்டால், Ôதேசபக்தி இல்ல. தேசத்துரோகி. நாட்டுப்பற்று’ என்று சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ பேசுகிறார்கள். இந்துக்களுக்காக பாஜக நடத்திய போராட்டம் என தேடினால், ÔÔழிஷீ ஸிமீsuறீt திஷீuஸீபீ” என்று கூகுள் கைவிரிப்பதைப் போல, இந்துக்களுக்காகவும் பா.ஜ.க கைவிரித்திருக்கிறது…

மேலும் படிக்க

உலக பார்ப்பனரும், வெள்ளைப் பரங்கியரும்

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரையென்ற காலமும் போச்சே” என்று பாடினார் பாரதியார். அவர் ஏன் இவர்கள் இருவரையும் இணைத்துப் பார்த்தார், பாடினார்?

தெற்காசியாவில் ஏழாவது நூற்றாண்டு முதல் பனிரெண்டாவது நூற்றாண்டு வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மக்களின் இறை நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்டு, தங்களை இறைவனே தேர்வுசெய்து அனுப்பிய இறைமக்களாக முன்னிறுத்தி, தங்களின் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், மனுஸ்மிருதி போன்ற நூல்களின் உதவியோடு அனைத்து தரப்பினரையும் அடிமைகளாக்கினர்.

பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய வெள்ளையினத்தவர் நீள் கடற்பயணங்களைத் துவங்கி, வெளிப்பகுதிகளைக் “கண்டுபிடிக்க” ஆரம்பித்தனர். இந்தியாவைத் தேடி “கண்டுபிடிப்பதற்காக” 1492-ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டிலிருந்து…

மேலும் படிக்க

  1. அரசியல், பொருளாதார, உளவியல் சிறையில் கறுப்பர்கள்

1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி ரோச்சஸ்டர் நகர பள்ளிவாசலுக்கு போலீசார் வந்தனர். மர்ம நபர்கள் துப்பாக்கியோடு பள்ளிவாசலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, சோதனை செய்ய வேண்டும் என மோப்ப நாயோடு…

மேலும் படிக்க

நினைத்தாலே கசக்கும்…!

நாம் நினைத்த உடன் ஒரு காரியம் நடந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இந்த டிஜிட்டல் உலகில்? மிகவும் சுவாரசியமாகத்தானே இருக்கும். அதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கவிருக்கின்றோம். இனி உங்கள் மொபைலையும், கணினியையும் தொடாமலேயே அதற்கு…

மேலும் படிக்க

தேவை தன்னம்பிக்கை!

அனைவருக்குமே தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. அதை சிலரால் மட்டுமே அடைய முடிகிறது. சின்ன அளவில் நடக்கும் போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டி வரை பல்வேறு போட்டிகள் உலகம் முழுவதும் நடக்கின்றது. அதில் பங்கெடுப்பவர் சொற்பம் என்றால், அதில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை மிக சொற்பம். பங்கெடுப்பவர்கள் கூட மிகச் சிறந்த தைரியம் உடையவராக…

மேலும் படிக்க

Comments are closed.