காஷ்மீரில் நடப்பவற்றை பாஜக அரசு மூடி மறைக்கிறது- ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கடும் விமர்சனம்

0

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்து, காஷ்மீா் மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது.

இந்நிலையில், கள நிலவரம் பற்றி ஆராய, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடியையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்த பின்னர், 4 எம்.பி.க்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பினர். மற்ற 23 எம்.பி.க்கள் நேற்று காஷ்மீருக்கு சென்றனர்.

ஐரோப்பிய எம்.பி.க்கள் வந்தபோதும், காஷ்மீரில் வன்முறை மற்றும் கடையடைப்பு சம்பவங்கள் நடந்தன. வன்முறை காரணமாக, சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இங்கிலாந்து லிபரல் ஜனநாயக கட்சி உறுப்பினருமான கிறிஸ் டேவிஸ் என்பவர், பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்துப்பேசிய அவர், “காஷ்மீரை பார்வையிடும் குழுவில் எனக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. காஷ்மீர் மக்களிடம் போலீஸ் துணையின்றி உரையாட வாய்ப்பு அளிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு அரசு தரப்பு  மறுப்பு தெரிவித்துவிட்டது.

காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை இந்திய (பாஜக) அரசு மூடி மறைத்து வருகிறது. பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இதை உலகம் விரவில் கவனத்தில் கொள்ள வேண்டும்” என கூறினார்.

Comments are closed.