பாஜக அரசு ஏற்பாடு செய்த காஷ்மீர் பயணத்தை புறக்கணித்த ஐரோப்பிய பிரதிநிதிகள்

0

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் மாதம் மத்திய பாஜக அரசால் நீக்கப்பட்டது. இதனையடுத்து இன்றுவரை அம்மாநிலம் சீர்குழந்துதான் உள்ளது.

இதன் பின்னர் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் பிரதிநிதிகள் அக்டோபரில் காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. சொந்தநாடு  நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைக்கூட காஷ்மீருக்குள் அனுமதிக்காமல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளை மட்டும் அனுமதிப்பதா? என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின.

மேலும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளில் சிலரும் காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அக்டோபர் மாதத்தைப் போலவே தற்போதும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுற்றுலா செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா மற்றும் சில வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சுற்றுலாவை தவிர்த்துள்ளனர். காஷ்மீர் மக்களை சுதந்திரமான முறையில், தாங்கள்விரும்பிய வைகயான எதார்த்த வழியில் சந்திப்பதற்கே ஆவலாக இருப்பதாகவும், திட்டமிட்ட முன்னேற்பாடுகள் கூடிய பயணத்தை விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Comments are closed.