FACEBOOK உண்மை முகம்

0

FACEBOOK உண்மை முகம்

அக்டோபர் 27 அன்று ஃபேஸ்புக்கில் இருந்து அன்கி தாஸ் ராஜினாமா செய்த செய்தி சாதாரண மக்கள் மத்தியில் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அன்கி தான் ஃபேஸ்புக்–ன் சாதாரண பணியாளர் அல்ல. ஃபேஸ்புக்-கின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுக்கான கொள்கை இயக்குனர் (றிஷீறீவீநீஹ் ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீ) ஆவார். ராஜினாமா செய்வதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர்தான் ஃபேஸ்புக்கின் விளம்பர முறைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு மசோதா குறித்து இவரிடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தியது.

ஒன்பது ஆண்டுகள் ஃபேஸ்புக்கில் பணி செய்த இவர் இந்தியாவில் அந்நிறுவனத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர். நிறுவனத்தின் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தவர் என்று ஃபேஸ்புக்கின் முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திடம் தனது நிறுவனத்திற்காக நல்ல முறையில் லாபி செய்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தவர்.

ஆகஸ்ட் மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரையில் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஃபேஸ்புக்கில் வெறுப்பு செய்திகளை பதிவிடுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அந்நிறுவனம் வரையறுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய ஃபேஸ்புக் பக்கங்களில் வெறுப்பு பேச்சுகள் கட்டுக்கடங்காமல் பதிவு செய்யப்பட்ட போதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அன்கி தாஸ் தடை விதித்தார் என்பதே முக்கிய குற்றச்சாட்டு. ஆளும் கட்சி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஃபேஸ்புக்கின் வணிக நலன்களை பாதிக்கும் என்பதே அவரின் கருத்து.

ஒரு சமூக ஊடகம், அதில் பணியாற்றும் ஒரு நபரின் ராஜினாமா இவை குறித்தெல்லாம் நாம் எதற்காக பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும்? இதற்கான பதிலையும் பின்னணியையும் விளக்குகிறது ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ஜிலீமீ க்ஷீமீணீறீ யீணீநீமீ ஷீயீ திணீநீமீதீஷீஷீளீ வீஸீ மிஸீபீவீணீ என்ற புத்தகம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.