கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு

0

கொரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகயோ மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த பதஞ்சலி நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளதாக, யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். இந்த மருந்தை ஆய்வுக்குள்படுத்தியபோது 69 சதவீத நோயாளிகள் 3 நாள்களிலும், 100 நோயாளிகள் 7 நாள்களிலும் குணமடைந்தது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் பிகார் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியயோர் மீது தமன்னா ஹாஷ்மி என்ற சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். அதில், ‘கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்துள்ளதாக பாபா ராம்தேவ் கூறியுள்ள நிலையில், அதுதொடர்பாக எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் மருந்து பற்றி பொதுவெளியில் கூறி, பாபா ராம்தேவும், ஆச்சரியா பாலகிருஷ்ணாவும் மக்களை தவறாக வழிநடத்தி, லட்சக்கணக்கானோர்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். எனவே இருவார் மீதும் இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவுகள் 420 (மோசடி), 120பி (குற்றவியல் சதி) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனு வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Comments are closed.