பாஜகவின் விவசாய விரோத சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

0

விவசாய விரோத வேளாண் சட்டத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக புதன்கிழமையான (நேற்று) காலை நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியான முறையில்  போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், “விவசாயிகளைப் பாதுகாப்போம்”, “தொழிலாளர்களைப் பாதுகாப்போம்”, “ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்ற பதாகைகளை கைகளில் ஏந்தியபடி  நாடாளுமன்ற வளாகத்திலிருந்த  அம்பேத்கர் சிலையிலிருந்து, மகாத்மா காந்தி சிலை நோக்கி பேரணியாக சென்றனர்.

பின்னர் மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திமுக, ஆர்ஜேடி, ஏஏபி, சமாஜ்வாதிக கட்சி மற்றும்தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

மாநிலங்களவையில் தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட மூன்று திருத்த சட்ட முன்வடிவுகளும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது நிறைப்பட்டது.

இந்த சட்டங்கள் நிறைவற்றப்பட்டவுடன்  மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதித்துள்ளதால் இவ்வாறு கூட்டத்தொடர் முன்னதாக ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

Comments are closed.