விவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்

0

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாவால் விவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்து விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய விளைபொருட்கள் ஏற்றம் மற்றும் பண்ணை சேவைகள், விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை உள்ளிட்ட 3 மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா விவசாயிகளுக்கு கடும் அவதிகளுக்குள்ளாக்கும் என்ற கருத்துக்கள் வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் “விவசாயிகளுக்கு தேவை ஆயிரக்கணக்கான விற்பனை சந்தைகள். அதை ஏற்படுத்தி தராமல் பாஜக அரசு இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றுவது கார்ப்பரேட்டுகளுக்குதான் வாய்ப்பாக அமையும்.

ஏற்கனவே பாஜக அரசால் உத்தர பிரதேச, ஹரியானா விவசாயிகள் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர். மோடி அரசு கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தகர்களிடம் சரணடைந்துள்ளது.” எனக் கூறினார்.

Comments are closed.