தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம்

0

விவசாயிகளை அழிக்கக்கூடிய 3 வேளாண் திருத்த சட்டங்களை பாஜக அரசின் கொண்டுவந்து அமல்படுத்த முயல்கிறது. இச்சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் முற்றுகையிட்டு பல்வேறு மாநில விவசாயிகள் 48 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிரில போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தரப்பினர், 3 வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய கோரியும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

இந்நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சட்டங்களை நிறுத்திவைக்கக் கூட முடியாது என்று பிடிவாதமடித்த மோடி அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

இதனையடுத்து விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்ட நகல்களை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் இன்று  திட்டமிட்டபடி (ஜனவரி 13) நடைபெறும் என்று  விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் வேளாண் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம் நாடு முழுவதும் ஜனவரி 13 போகிப் பண்டிகை நாளில் நடைபெறுகிறது. தமிழகத்திலும் இப்போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply