காஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு!

0

காஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா, கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மிர் மாநில முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை எம்.பியுமான ஃபருக் அப்துல்லா, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’ என்று காஷ்மீர் மாநில காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை ஒருவரை சிறைப்படுத்தலாம். இந்தச் சட்டம் முதன்முறையாக, ஃபரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா மீது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது ஃபரூக் அப்துல்லா மீது இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் உறவினர்களும், நண்பர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபருக் அப்துல்லாவை சென்று சந்திப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.