முஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS

0

GULF நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன்கிழமை அன்று வெளியிட்ட கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான விஷ கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைகளில் வளைகுடா அதிகாரிகள் களமிறங்க வேண்டும் என்றும் GULF நியூஸ் கோட்டுக்கொண்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் சில இந்துத்துவ சங்பரிவார்கள் வளைகுடா நாடுகளுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலர் மீது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அடக்குறைகளை அறிந்த அரபு நாட்டின் அரச குடும்பத்தினர் இந்துத்துவா வெறியர்களை கடுமையாக கண்டித்தனர். மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு உதவவும் அவர்கள் முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயை பரப்பியது முஸ்லிம்ளகள் என்ற பொய்யான தகவல்களையும் முன்னணி செய்தி தொலைக்காட்சிகள் பிரச்சரம் செய்தது. இது அரபு நாடு மக்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் இதுபோன்ற செய்திகளை முன்னின்று வெளியிட்ட , ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று GULF நியூஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments are closed.