FIFA கால்பந்து தரவரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ஃபலஸ்தீன்

0

வரலாற்றில் முதன் முறையாக FIFA சர்வதேச கால்பந்து தர வரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது ஃபலஸ்தீன். இதனை ஃபலஸ்தீன் கால்பந்து சங்கத்தின் தலைவர் “வரலாற்று சாதனை” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய இந்த தரவரிசை முன்னேற்றத்தை அடுத்து தரப்பட்டியலில் ஃபலஸ்தீன் 82வது இடத்தில் உள்ளது.

உலகக்கோப்பை தகுதி ஆட்டத்தில் தோல்வியுற்றபின் இந்த தரப்பட்டியலில் 16 இடங்கள் வீழ்ச்சியடைந்து இஸ்ரேல் 98வது இடத்தில் உள்ளது.

2019 ஆசிய கோப்பை போட்டியில் தகுதி பெறுவதற்காக தற்போது தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஃபலஸ்தீன் வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த போட்டிகளில் பூட்டானுடனான 10-0 என்ற கோல் கணக்கில் ஃபலஸ்தீன் பெற்ற வெற்றியும் அடக்கம்.

தற்போதைய இந்த அறிவிப்பு ஃபலஸ்தீனின் மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஆறு இஸ்ரேலிய கால்பந்து கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் FIFA அமைப்பை வலியுறுத்த ஃபலஸ்தீனிய கால்பந்து அமைப்பு மேற்கொண்ட பிரச்சாரத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளது.

சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இந்த ஆக்கிரமிப்புகள் சட்டவிரோதமானது. இதனால் இஸ்ரேல் மீதி நடவடிக்கை எடுக்கும்படி FIFAவை ஃபலஸ்தீனிய கால்பந்து அமைப்பு கேட்டுக்கொண்டது.

ஃபலஸ்தீனை முதன் முதலில் FIFA 1998 ஆம் ஆண்டு அங்கீகரித்தது.

Comments are closed.