மக்கள் தொகை பதிவேட்டில் தவறான விவரம் அளித்தால் அபராதமா…?

0

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவதுM தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கு எடுக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பா் 30ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

CAA, NRC மற்றும் NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களிடையே எதிர்ப்புகள் இந்த கணக்கெடுப்புக்கு நிலவி வரும். அப்படியிருக்கும்பட்சத்தில் யாராவது தவறான தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் அவர்கள் பிறந்த இடம் போன்ற சில கடினமான கேள்விகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேசன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எண்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.