“முதலில் உங்கள் தந்தையின் பிறப்பு சான்றிதழை காட்டுங்கள்?” -மோடிக்கு அனுராக் கஷ்யப் கேள்வி

0

பிரபல பாலிவுட்டில் திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் கஷ்யப் தொடர்ந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

CAA, NRC மற்றும் NPR போன்ற சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்ட வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று மாணவர்கள் மீது ஆ.எஸ்.எஸ்-ஐ சார்ந்த ABVP அமைப்பின் தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

JNU மாணவர்கள் தாக்கப்பட்டதிய கண்டித்து மும்பையில் போராட்டம் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர், நடிகைகளான அனுராக் கஷ்யப், தீபிகா படுகோனே, டாப்ஸி பானு, ஜோயா அக்தர், தியா மிர்சா உட்பட பலர் பங்கேற்று தாக்குதல் நடத்தியவ்ர்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அனுராக் கஷ்யப், “CAA அமல்படுத்தும் பிரதமரின் மோடியின் முழு அரசியல் அறிவியல் பட்டத்தையும் நான் பார்க்க விரும்புகிறேன். முதலில் மோடி கல்வியறிவுள்ளவர் என்பதை நிரூபிக்கட்டும். மோடி, அவரது தந்தை மற்றும் குடும்பத்தின் பிறப்புச சான்றிதழைல்களையும் முழு நாட்டிற்கும் காட்ட வேண்டும். அதன் பிறகு எங்கள் ஆவணங்களை கேட்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.