கருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி

0

கருத்து சுதந்திரத்தை தடுப்பதற்கு தேசத் துரோக சட்டத்தை இரும்பு கரத்துடன் மத்திய பாஜக அரசு பயன்படத்துவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இதுகுறித்து பேசிய அவர்: “கருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத்துரோக வழக்கையும், தவறான செய்தி வெளியிடு என்ற குற்றச்சாட்டின் பேரிலும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது தவறான செய்தி வெளியிட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மட்டும் 70 தேசத் துரோக வழக்குகளாகும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கருத்துக்கள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதுபோல், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கானின் கருத்துகளும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று லோகுல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply