கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகோயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீண்டும் உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். கொரோனில் 92 பி என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜூன் 1993ஆம் வருடம், அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக பதிவு செய்துள்ளது.
1993ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட மருந்தை, மக்களிடமுள்ள கொரோனா அச்சத்தை பயன்படுத்தி எதிர்ப்பு சக்தியை கூட்டும் என கூறி தங்களுடைய தயாரிப்பை பிரபலப்படுத்தி விற்பனைக்கு கொண்டு சென்றது.
இதனால் பொது மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர கொரோனாவை அது குணப்படுத்தாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.