பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். தற்போது இவர் பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து கம்பீர் தெரிவித்ததாவது, பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும், மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருக்கிறார். பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

இவர் மக்களவை தேர்தலில் கண்டிப்பாக பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிகிறது. இவருக்கு இத்தேர்தலில் டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதகாவும், மேலும் இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments are closed.