#GoBackModi பாண்டேவின் பாகிஸ்தான் பயமுறுத்தலை அம்பலப்படுத்திய பிரெஞ்ச் ஹாக்கர்

0

#GoBackModi பாண்டேவின் பாகிஸ்தான் பயமுறுத்தலை அம்பலப்படுத்திய பிரெஞ்ச் ஹாக்கர்

மோடியின் தமிழக வருகையை #GoBackModi ஹாஸ்டாக் டிரெண்ட் ஆவதை வைத்து நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அவரது தமிழக வருகையின் போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் தமிழர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை ஒட்டி பதிவிடப்படும் #GoBackModi ஹாஸ்டாக் பாகிஸ்தானால் டிரெண்ட் செய்யப்படுகிறது என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை முன்னாள் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் பதிந்திருந்தார்.

பாண்டேவின் இந்த கருத்தை இணையத்தில் பாஜக ஆதரவாளர்கள் பரவலாக எடுத்துச் செல்ல அது பிரபல பிரெஞ்ச் கணினி பாதுகாப்பு ஆலோசகர் எலியாட் அல்டர்சன் கண்களில் சிக்கியுள்ளது. இது குறித்து தனது ஆய்வினை துவங்கிய அவர் #GoBackModi ஹாஸ்டாக் டிரெண்டினை குறித்து சாமானியர்களுக்கு புரியும்படி தனது ட்விட்டர் தொடர் பதிவுகள் மூலம் விளக்கியுள்ளார்.

மொத்தம் 68543 ட்விட்டர் பதிவுகளை தனது ஆய்வுக்கு உட்படுத்திய அவர், அந்த பதிவுகளில் பரவலாக குறிப்பிடப்பட்ட ஹாஸ்டாக்குகளை வரிசைப்படுத்தியுள்ளார்.

அதில்

41174 #gobacksadistmodi
16818 #gobackmodi
1631 #gobackmodii
1566 #whereismugilan
1437 #rafaledeal
1197 #rafalescam
681 #tnwelcomesmodi
657 #gobackantinationalmodi
477 #admkfails
476 #bjpfails

ஆகிய எண்ணிக்கையில் மேற்கண்ட ஹாஸ்டாக்குகள் பதிவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ட்வீட்கள் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை பார்க்கின்ற போது அவற்றில் முதல் பத்து இடங்களாக

3696 Chennai, India
2590 India
1742 Tamil Nadu, India
1701 Chennai
931 chennai
646 Coimbatore, India
602 Bengaluru, India
437 தமிழ்நாடு
415 New Delhi, India
355 Chennai

என்ற இடங்கள் பதிவாகியுள்ளன. பிற பதிவர்கள் தங்களது இருப்பிடத் தகவலை மறைத்துள்ளனர். (தனியுரிமை காரணமாக பெரும்பாலானோர் இப்படி செய்வது வழக்கம்). இன்னும் இந்த ஹாஸ்டாக்கை டிரெண்ட் செய்த இணைய பிரபலங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில்

@savukku
@rajakumaari
@piraikannan
@DesiStupides
@Mark2kali

ஆகியோர் உள்ளனர் என்றும் எலியாட் பதிவு செய்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனது பதிவின் இறுதியாக, “உங்கள் கற்பனைகளை உடைப்பதற்கு வருந்துகிறேன். ஆனால் இந்த ஹாஸ்டாக்கை டிரெண்ட் செய்ததன் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார். தங்களது எதிர்ப்பை எல்லாம் பாகிஸ்தான் பெயர் சொல்லி தப்பா நினைக்கும் பாஜக வின் முயற்சி எலியாட் அல்டர்சனால் தற்போது தகர்ந்துள்ளது.

எலியாட்டின் முழு பதிவை காண

https://threader.app/thread/1103573118717779968

Comments are closed.