என்.ஆர்.சி சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

0

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) எதிர்காலத்திற்கு அடிப்படை ஆவணமாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தகவிழாவில் கலந்துக்கொண்டு பேசிய அவர், “என்.ஆர்.சி எதிர்காலத்திற்கு உதவக்கூடிய அடிப்படை ஆவணமாக இருக்கும். சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். 1951ஆம் ஆண்டு நடத்தப்பட்ட என்.ஆர்.சி-யின் புதிபிப்புதான் தற்போது நடைபெற்று வருகிறது. சட்ட விரோதமாக குடியேறியவர்களால் ஏற்படும் கலவரங்களை தடுக்க உதவும் என்று கோகோய் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களை திடீரென சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி, அவர்களை அகதிகளாக்கும் சூழ்ச்சியை  மத்திய பாஜக அரசு என்.ஆர.சி என்ற சட்டத்தின் மூலம் கையில் எடுத்துள்ளது.

அஸ்ஸாம் மட்டுமில்லாது நாடு முழுவதும் என்.ஆர்.சி சட்டம் நடைமுறைபடுத்தப்படும் பாஜக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் 12 நாட்களில் பணி ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் என்.ஆர்.சி இவ்வாறு பற்றி கூறியிருப்பது மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.