என்.பி.ஆர். தயாரிப்பு பணியை தொடங்கி வைக்கும் குடியரசு தலைவர்

0

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடத்த பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை வரும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

என்.பி.ஆர்-ஐ வைத்து என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த துடிக்கும் பாஜக அரசு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கும் இந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் முதல் நபராக தனது பெயரை பதிவு செய்து இத்திட்டதை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பதிவேடு 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது 2015ஆம் ஆண்டு புதிப்பிக்கப்பட்டது. அடுத்த புதிப்பிக்கும் பணி ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் நடைபெறும். குடியுரிமை சட்டம் 1955, குடியுரிமை விதிகள் 2003இன் அடிப்படையில் இந்த பதிவேடு உள்ளூர் (கிராமம் / துணை நகரம்), துணை மாவட்டம், மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் தயார் செய்யப்படும்.

இந்த சட்டங்கள் மூலம் பாஜக அரசு, மக்களை மதத்தின் ரீதியில் பிளவுப்படுத்தி நாட்டை துண்டுத்துண்டாக்க பார்கிறது. மேலும் இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் பணியிலும், இந்திய தேசத்தை  இந்து தேசமாக மாற்றும் நடவடிக்கையிலும் தீவிராமாக செயல்பட்டு வருகிறது பாஜக அரசு.

Comments are closed.