கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மூன்று இந்துத்துவ தீவிரவாதிகள் கைது!

1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான கோவிந் பன்சாரே கடந்த 2015 பிப்ரவரி மாதம் 20 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சச்சீன் அண்டுர், அமித் பட்டி மற்றும் கணேஷ் மிஷ்கின் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மூன்று பேரும் கோலாப்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மூவரும், நரேந்திர தபோல்கர், மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாகும். ஏற்கெனவே இவர்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment