மத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்!

0

ஜிஎஸ்டி வரி முறை கடந்த 2017ஆம்  ஜூலை முதல் அமலுக்கு வந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக ஜிஎஸ்டி  வருவாய் 11.6 சதவீதமாக குறைந்திருப்பதால் அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஈடுகட்ட ஜிஎஸ்டி வரிகளை உயத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி 5 சதவீத வரி இனி 6 சதவீதமாக உயர்த்தப்படும் என்று பிஸினஸ் ஸ்டாண்டர்டு செய்தி தெரிவிக்கிறது. தற்போது 243 பொருட்களுக்கு வசூலிக்கப்படும் 12 சதவீத வரி இனி 18 சதவீத வரையறைக்குள் கொண்டு வரப்படும்.

இதனால் வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும், ஆனால் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் அடுத்த வாரத்தில் விரிவான ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பின்னர் வரிவிதிப்பில் மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.