GST வரி விகிதத்தில் முழுமையான மாற்றங்கள் தேவை: வருவாய் செயலர்

0

சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களின் சுமையை குறைக்க GST வரி விகிதத்தில் முழுமையான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வருவாய் செயலர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை பேட்டி ஒன்றின் போது அவர், மத்திய மற்றும் மாநில வரிகளை ஒன்றாக இணைக்கும் GST சீரடைய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார். நடைமுறைக்கு வந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் பல நடைமுறை சிக்கல்களை GST சந்தித்து வருகின்றது. அதனால் இதில் பல மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இதில் முழுமையான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வருவாய் செயலர் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் ஒரே வரிப்பிரிவில் உள்ள பல பொருட்கள் பிரிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வருகிற நவம்பர் மாதம் பத்தாம் தேதி GST  கவுன்சிலின் 23 வது கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அனைத்து மாநில பிரதிநிதிகளையும் உள்ளடக்கி நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் GST யினால் ஏற்பட்ட லாப நஷ்டங்கள் குறித்தும் விவாதிக்கபப்டும் என்று நம்பப்படுகின்றது.

குறைவான வருவாய் உள்ள தொழில்களுக்கு குறைந்த அளவிலான வரி செலுத்தும் வரம்பாக இருந்த 75 லட்ச ரூபாய் தற்போது 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஆண்டு வருமானம் 1.5 கோடிக்கு கீழ் உள்ள தொழில் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்தினால் போதும் என்றும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

GST முறை சீராக ஒரு வருடம் பிடிக்கும் என்றும் முன்னதாக VAT  நடைமுறைப் படுத்தப்பட்ட போதும் எதிர்ப்புகள் எழுந்தது என்றும் பின்னர் அது சீராக ஒரு வருடம் ஆனது என்றும் தற்போது GST  க்கான எதிர்ப்பு இன்னும் பன்மடங்கு அதிகமாகியுள்ளது என்றும் அதனால் இந்த நிலை சரியாக ஒரு வருடம் ஆகும் என்று ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

Comments are closed.