ஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் மீதான இரண்டாவது தாக்குதல் தவறான ஜி.எஸ்.டி வரி விதிப்பு தான் காரணம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜி.எஸ்.டி என்பது ஒரு வரி அமைப்பு அல்ல அது இந்திய ஏழைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நாட்டு மக்களை ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக ஒன்றிணையவேண்டும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ஜி.எஸ்.டி-யை காங்கிரஸ் கூட்டணி அரசே முதலில் முன்வைத்தது. ஆனால் பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி என்பது முற்றிலும் மாறுபட்டது. 28% சதவீதம் வரையிலான நான்கு வெவ்வேறு வகையான வரி விதிமுறைகள் கொண்ட அது புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமானது.” இவ்வாறு வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் ஜி.டி.பி எதிர்மறையில் சென்றதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி. லட்சக்கணக்கான சிறு வணிகம், கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு, மாநிலங்களின் பொருளாதார நிலைமை என ஏராளமானவற்றை அழித்துவிட்டது ஜி.எஸ்.டி. ஜி.எஸ்.டி என்றால் பொருளாதார பேரழிவு என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.