மாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்

0

GST வருவாய் இழப்பால் நிதி இன்றி தவிக்கும் மாநிலங்களுக்கு பணம்தான் தேவையே தவிர, மத்திய அரசின் உறுதிமொழி கடிதம் அல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“GST வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்கு, அவை கடன் வாங்குவதற்கு உறுதிமொழிக் கடிதம் அளிப்பதாக மத்திய பாஜக அரசு கூறுகிறது. அந்த கடிதம், வெற்று வார்த்தைகளால் நிரம்பிய காகிதம் தான். அதற்கு மதிப்பே இல்லை. மாநிலங்களுக்கு தேவை பணமே தவிர, மத்திய அரசின் உறுதிமொழி கடிதம் அல்ல. மத்திய பாஜக அரசால் மட்டுமே பல்வேறு வழிகளில் நிதிகளை திரட்டி மாநிலங்களுக்கு GST நிலுவையை வழங்க முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், GSTஐ அமல்படுத்தும்போது அளித்த வாக்குறுதியின்படி வருவாய் இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.