குஜராத் இடைத்தேர்தல்: பாஜவுக்கு எதிராக தேர்தல் களத்தில் குதிக்கும் வேலையில்லா பட்டதாரிகள்

0

குஜராத் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி தெரிவித்து 200க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் வழக்கம்போல் பாஜக- காங்கிரஸ் கட்சிகளுக்குமிடையே தான் கடும் போட்டி இருந்து வருகிறது.

ஆனால் இம்முறை வேலையில்லா பட்டதாரிகள் பலர் தேர்தல் களத்தை சந்திக்க தயாராக உள்ளனர். நான்கு தொகுதிகளிலாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சிக்சிட் யுவ பெரோஜ்கர் சமிடி (Sikshit Yuva Berozgar Samiti) என்ற பெயரில் துங்கப்பட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளது கமிட்டி தற்போது தேர்தலை சந்திக்க உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், குஜராத் அரசு பணிக்கு தேர்வு எழுதி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஐந்து ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இதுவரை பாஜக அரசு வேலைவாய்ப்பு எதுவும் வழங்கவில்லை. இதனால் வீடு வீடாக சென்று மாநில பாஜக அரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். எங்களது இந்த முடிவால் காங்கிரஸ் கட்சி ஆதாயம் இருந்தாலும் பரவாயில்லை. இந்த பாஜக அரசுக்கு சரியான பாடம் புகட்டுவதுதான் எங்களது நோக்கம். எங்கள் மீது ஏராளாமான வழக்குகளையும் பாஜக அரசுதான் தொடர்ந்தது. எங்களது போராட்டங்களை ஒடுக்கியதும் இந்த பாஜக அரசுதான் என்று தெரிவித்துள்ளனர்.

Leave A Reply