குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

0

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது இந்துத்துவ கும்பல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சர்தார்புரா கிராமத்தில் ஒரே வீட்டில் இருந்த 33 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த வன்முறை சம்பவத்தின்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்காமல் அவர் தலைமையிலே வன்முறையை நடத்தினார் என்ற பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

வன்முறை தொடா்பாக விரிவாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி தலைமையிலான அறிக்கையை கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அந்த வன்முறையில்  மோடி உள்ளிட்ட மாநில அதிகாரிகள் 63 பேருக்கு தொடா்புமில்லை என்று கூறப்பட்டிருந்தது.

விசாரணை குழுவின் அறிக்கைக்கு எதிராக கலவரத்தில் உயிரிழந்த முன்னாள் எம்.பி. எசான் ஜாஃப்ரியின் மனைவியான ஜாகியா ஜாஃப்ரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால் 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

குஜராத் உயா்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததற்கு எதிராக ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணை பலமுறை முறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால் இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

Comments are closed.