இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை

0

கொரோனா பாதிப்பாக உலக முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வரும் நிலையில் கொரோனாவை குணப்படுத்த இதுவரை போதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்படியிருக்க, இந்தியாவில் மட்டும் காலமாக காலமாக சமூக வலைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளை பாஜகவும், இந்துத்துவ சங்பரிவார்களும் பதிவிட்டே வருகின்றனர். மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகளை, அரபு நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்துத்துவ வெறியர்களே தர்போது அதிகமாக பதிந்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள், அரபு நாடுகளின் அரச குடும்பத்தினர்களின் கண்களுக்கு தென்பட, உடனே அவர்கள் அரபு நாடுகளில் உள்ள் சங்பரிவார்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் வளைகுடாவில் பல இந்துத்துவாவினர்களுக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றனர்.

இதனை சுட்டிகாட்டி மோடியும், கொரோனாவுக்கு மதம் கிடையாது என்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மேலும் துபாயின் இந்திய தூதரும், மதத்தை சுட்டி சமூக வலைதளங்களில் பதிவது ஏற்புடையதல்ல என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் வெறுபூட்டும் பதிவுகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றவை நிறுத்த வேண்டும் என்று அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விட்டதோடு #ISLAMOPHOBIA_IN_INDIA என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் ஷார்ஜாவில் ஒரு ரெஸ்டாரெண்டில் சமையல் கலைஞராக பணிபுரியும் ராவத் ரோஹித் மற்றும் சச்சின் கினோகில் ஆகியோர் சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்காக அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை அந்த நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும் இவர்கள் துபாய் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோன்று, துபாயில் விஷால் தாக்கூர் என்பவரும் சமூக வலைதளங்களில் பலமுறை இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் பதிந்துள்ளதாகவும், இதனை அடுத்து விஷால் தாக்கூரும் அவர் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments are closed.