துபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்

0

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் GULF செய்தியின் ஆசிரியர் மஜார் ஃபருக்கிக்கு பாஜக மற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுத்துவருகின்றனர்.

அரபு நாடுகளில் பணிபுரியும் இந்திய வெளிநாட்டினர் பற்றி செய்தி வெளியிட்டதாக பத்திரிகையாளர் மஜார் ஃபரூக்கி-க்கு டிவிட்டர் மற்றும் மெசேஜ் வாயிலாக இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல் போன்ற பதிவுகளையிட்டு வருகின்றனர்.

டிவிட்டரில், மோடியை பின்தொடர்ந்து வந்த பல பயங்கரவாதிகள் மஜாரை மிரட்டி பதிவிட்டும், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளனர். அவர் இந்தியா திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும் பத்திரிகையாளர் மஜாருக்கும் அவரது மகள்களுக்கும் தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல் பதிவுகளை பதிவிட்டுள்ளனர். அவர்கள் எங்களது புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு மிரட்டி வருவதாக மஜார் கூறியுள்ளார்.

துபாயில் GULF செய்தியில் பணியாற்றுவதற்கு முன்பு லக்னோவில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் பணியாற்றி பல விருது பெற்ற பத்திரிகையாளர், தனது பத்திரிகை வாழ்க்கையில் ஒருபோதும் இவ்வளவு மிரட்டல்களை பெற்றதில்லை என்று கூறினார்.

Comments are closed.